ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
விஜய்சேதுபதி ஏராளமான படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். நண்பர்களுக்காக அவர் இதை செய்து வருகிறார். அந்த வரிசையில் ஜனகராஜுக்காக ஒரு படத்தில் இலவசமாக சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதுபற்றி விபரம் வருமாறு:
ஜேபிஜே பிலிம்ஸ் சார்பில் ஜெயசீலன் தயாரிக்கும் படம் ஒபாமா. இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பூர்நிஷா நடிக்கிறார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா,தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதனால் நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன். அதை பார்த்த நடிகர் ஜனகராஜ் என்னிடம் வந்து நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவர் 96 படத்தின் டைரக்டர் பிரேம் அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார். அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்.
இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகியபோது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.
உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எழுதி 96 படத்தின் இயக்குனருக்கு வாட்ஸ் அப் செய்ய, அதை அவர் விஜய் சேதுபதிக்கு அனுப்ப அதை படித்த அவர் என் போன் நம்பர் வாங்கி என்னிடம் பிரதர் படிச்சு பார்த்தேன் நல்லாருக்கு நேரில் டிஸ்கஷன் செய்து எடுப்போம் என்றார். பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கட்சியை அவரோடு நேரில் டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார் என்றார்.