பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
கடந்த சில நாட்களாக தமிழக தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காரணம் விஜய், அஜித் படமல்ல, ஸ்பைடர் மேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் படம் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம். டாம் ஹாலண்ட் நடித்துள்ள இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார். இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் வெளியானது.
ஸ்பைடர்மேன் படங்களின் ஒவ்வொரு பாகத்திலும் தனித்தனி ஹீரோக்கள் ஸ்பைடர்மேனாக நடித்தார்கள். அவர்களுக்கு தனித்தனி வில்லன்கள் இருந்தார்கள். வில்லன்களுக்கும், ஹீரோக்களுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இந்த படத்தில் எல்லா ஹீரோக்களும், எல்லா வில்லன்களும் சங்கமிக்கிறார்கள். அதாவது அவன்ஞ்சர் எண்ட் கேம் படத்தில் அனைத்து சூப்பர்மேன்களும் சங்கமித்ததை போன்று. இதனால் அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள்.
படத்தை பற்றி இருவித விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்த்துவிடுவது என்கிற மனநிலை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 32.75 கோடியை வசூலித்து சாதித்துள்ளது.
புதிதாக வந்துள்ள ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையிலும் பல மாநிலங்களில் 50 சதவித இருக்கைக்கே அனுமதி என்கிற நிலையிலும் ஸ்பைடர் மேன் வசூல் சாதனை படைத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளைக்குள் (19ம் தேதி) 100 கோடி வசூலித்து விடும், என்கிறார்கள்.