'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் கூட்டமும், தனி வியாபாரமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்பைடர் மேனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். கடைசியாக வெளிவந்த 'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்' படம் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஸ்பைடர்மேன் வரிசையில் அடுத்து வரும் படம் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்- வெர்ஸ்'. இந்த படம் வருகிற ஜூன் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய 9 இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, ஸ்பைடர்மேன் சீரிஸ் திரைப்படம் 9 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. 9 மொழிகளில் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சோனி நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. இந்த படம் ஒரு அனிமேஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.