இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் லேட்டஸ்ட் வரவு ராஷ்மிகா மந்தனா தான். இதில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இந்தநிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ரஷ்மிகா, இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ராஷ்மிகா பற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் மத்தியில் தேசிய அளவிலான 'க்ரஷ்' ஆக மாறிவிட்டார் ராஷ்மிகா. அதனால் நான் கூட ராஷ்மிகாவை க்ரஷ்மிகா என்றுதான் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவேன்... நாம் பணியாற்றும்போது ஒருசிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும்.. அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா. சரியான, இயக்குனர்கள், சரியான கதையை தேர்வு செய்தால் அவரது திறமைக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என பாராட்டு பத்திரமும் வாசித்தார் அல்லு அர்ஜுன்.