பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மும்பை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் இந்தி டப்பிங்கையும் தற்போது முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தி மற்றும் தெலுங்கு தவிர்த்த தென்னிந்திய மொழிகளில் இந்தப்படத்தின் மூலமாக அழுத்தமாக காலூன்றி விடவேண்டும் என்கிற முனைப்பில், கன்னடம் தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் ஜூனியர் என்டிஆரே பயிற்சி எடுத்து டப்பிங் பேசியுள்ளாராம்..