அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் நாளை மறுநாள் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சாமி…சாமி…' மற்றும் 'ஓ சொல்றியா மாமா..' பாடல்கள் அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகியுள்ளன. இரண்டு பாடல்களுக்குமான நடனங்கள் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 'சாமி..சாமி' பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் நடனமாடியுள்ளனர். பலரும் இந்தப் பாடலுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன் என குட்டி டிரவுசர், டிஷர்ட்டுன் இடுப்பை வளைத்து, நெளித்து ஆடி ராஷ்மிகா வெளியிட்டுள்ள வீடியோ 23 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. “இந்த ரீலை பலரும் செய்துள்ளதை நான் பார்க்கிறேன், அதனால் நானும் இந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன், அதனால் என்னுடைய வீடியோ ஒன்றையும் உருவாக்கினேன். இந்த மாஸ் பார்ட்டியில் இன்னும் பலரும் சேருவீர்கள் என நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா' படம் ராஷ்மிகாவுக்கு ஒரு திருப்புமுனையான படமாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.