ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு | ‛தி கிரேமேன்' டிரைலர் தமிழிலும் வெளியானது - வில்லனாக தனுஷ் | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் | 'தி கிரே மேன்' டிரைலர் - ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் தனுஷின் பெயர் | கார்த்தியின் ‛சர்தார்' தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு |
தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கு மார்க்கெட் மீதும், தெலுங்கு நடிகர்களுக்கு தமிழ் மார்க்கெட் மீதும் எப்போதுமே கண் உண்டு. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என்று தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் புஷ்பா படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுகிறார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், தாணு, ஆர்.பி.சௌத்ரி, சிறுத்தை சிவா, தேவிஸ்ரீ பிரசாத், மதன் கார்க்கி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அல்லு அர்ஜூன், ”தமிழ்நாட்டில் தான் பிறந்தேன். 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தப்பாக இருந்தாலும், தமிழ் பேசுவது தான் அழகாக இருக்கும். புஷ்பா திரைப்படம் 4 படத்துக்கு சமம். இந்தப்படம் செம்மரக் கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது.
சாமி சாமி பாடல் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் காரணம். பாடல் வெற்றி பெற்றதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் புஷ்பா படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி” என்றார்.
பின்னர் தமிழில் யார் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கமல், விஜய், தனுஷ் அனைவரும் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயன் நன்றாக டான்ஸ் ஆடுகிறார். சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள்” என்றார்.