''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த நவ., 25ல் திரைக்கு வந்த படம் ‛மாநாடு'. பல தடைகளை கடந்து இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகும் முதல்நாள் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகவில்லை என தயாரிப்பாளர் அறிவித்தார். பின்னர் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் படம் சொன்ன தேதியில் வெளியானது. படமும் தற்போது நல்ல வசூலை தந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு : மாநாடு படம் வெளியாக வேண்டிய சமயத்தில் பைனான்சியர் உத்தம் சந்த்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.5 கோடி தர வேண்டியிருந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர். இதனால் சுரேஷ்காமாட்சி, உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து உத்தம் சந்த், சுரேஷ் காமாட்சி இருவரும் உரிய விளக்கம் அளிக்குமாறு வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை டிச.,16க்கு தள்ளி வைத்தார்.