சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் மீண்டும் நடித்த குஷ்பு, கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காலகட்டத்தில் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் சிலர் குஷ்புவுக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை அதனால் தான் மெலிந்துவிட்டார் என்று கருதியும் அவரி டத்தில் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினார்கள்.
குஷ்பு கூறியிருப்பதாவது : ‛‛20 கிலோ வெயிட் குறைத்து அங்கிருந்து இங்கு வந்துள்ளேன். நான் நல்ல உடல் ஆரோக்யமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமே செல்வம். உங்களுக்கு உடம்பு சரி யில்லையா என்று விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி. இதற்கு முன்பு நான் இத்தனை பிட்டாக இருந்ததில்லை. உங்களில் ஒரு பத்து பேரையாவது வெயிட் குறைத்து பிட்டாக இருக்க தூண்டினால் நான் வெற்றி பெற்றுள்ளதாக கருதுவேன்'' என்கிறார்.




