நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் விருது தான் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற ஒரு விருதும் வழங்கப்படுகிறது.
94வது ஆஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டுப் படங்களின் போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்ப்படமான 'கூழாங்கல்' படம் போட்டியிடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் விருதுகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
93 நாடுகளில் தயாரான படங்கள் அந்த ஒரு விருதுக்காக போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் முதன் முதலாக சோமாலியா நாட்டிலிருந்து ஒரு படம் இடம் பெறுகிறது. இந்தப் படங்களிலிருந்து 15 படங்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதற்கான அறிவிப்பு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கூழாங்கல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். தங்களது படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “பட்டியலில் எங்கள் படத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கனவு, உண்மை, பாக்கியம்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.