ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதிபுருஷ் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்தபடியாக மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க, அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை டிசம்பர் 5-ந்தேதி முதல் ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்குகிறது. இதில், பிரபாஸ் - தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். தற்காலிகமாக புராஜக்ட் கே என்று பெயர் வைத்துள்ள இப்படம் சயின்ஸ் திரில்லர் கதையில் உருவாகிறது.