விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நெட்டிசன்களால் வைரல் செய்யப்பட்டு பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் செலிபிரேட்டி அந்தஸ்தை பெற்றார். அதனை தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் சென்னை அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'அமைந்தகரையில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வரும் மனிஷும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்து இருவரும் பழகி வந்தோம். அந்த நாட்களில் என்னிடமிருந்து இருச்சக்கர வாகனம், 2 பவுன் சங்கிலி என இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேலாக வாங்கி கொண்டார். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் தொடர்ந்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியதுடன் பண மோசடியும் செய்த மனிஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.




