தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, ஹரிஷ் பெரடி, கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் மாயோன். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கிஷோர் கூறியதாவது: படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விசுவல் ட்ரீட்டாக இது இருக்கும். படத்தின் டீசரை பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறோம். என்றார்.