இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஆக்சன் கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக அதிக அளவில் எடையை குறைத்து நடித்துள்ளார் சிம்பு.
இப்படத்தின் படிப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி, மும்பையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதத்தில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். சிம்புவின் மாநாடு ஹிட் அடித்திருப்பதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.