லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. கொரோனா தொற்று, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்தநிலையில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கத் தொடங்கி விட, ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் இந்தியன்-2 படத்தை இயக்க ஷங்கர் ஒப்புக் கொண்டார். அதனால் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த ஆண்டில் இந்தியன்-2வை ஷங்கர் தொடருவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், தான் கர்ப்பமாகியிருப்பதை சொல்லி விலகிக் கொண்டார். அதனால் தற்போது அவர் வேடத்தில் நடிப்பதற்கு தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்த தமன்னா அடுத்தபடியாக இந்தியன் 2வில் இணைவதோடு, கமல், ஷங்கர் கூட்டணியிலும் முதன்முதலாக இணைந்து நடிக்கப்போகிறார்.