என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் வைதேகி காத்திருந்தாள். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
 காணாமல் போன வைதேகியாக நடித்துக் கொண்டு ஒரு பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் சரண்யா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது. காணாமல் போன வைதேகியே அவர்தான் என்று.  வைதேகியை பிரஜின் காதலிக்கிறார். இந்த பிரச்சினைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாகிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            