ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென சென்று பார்வையிட்டார். அங்கு அவர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அது எப்படி இயங்குகிறது என்று அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சல்மான்கான் எழுதியதாவது: நான் இங்கு வந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருபோதும் மறக்க முடியாத இடமாக உள்ளது. நூற்பு ராட்டினத்தை காந்தி பயன்படுத்தினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகும். தேசத் தந்தை காந்திஜியின் ஆன்மாவுக்கு இந்த இடம் அமைதி தரும். மீண்டும் நான் இங்கு வருவேன். அப்போது இங்கு நிறைய கற்றுக்கொள்வேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான்கானுக்கு காந்தி ஆசிரம நிர்வாகம் சார்பில் கொத்து நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அவர் தனது கையில் சுற்றிக் கொண்டார். சல்மான்கான் காந்தி ஆசிரமம் வந்து தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆசிரமத்தின் முன்பு கூடினார்கள்.