அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மலையாள திரையுலகில் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜூக்கு ஹிந்தி திரையுலகமும் ஒன்றும் புதிதல்ல. இதுவரை ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆனார். அவரை வைத்தே சமீபத்தில் ப்ரோ டாடி என்கிற தனது இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இந்த அனுபவங்களை ஹிந்தியில் முதலீடு செய்யும் விதமாக தற்போது ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸில் நடிப்பதோடு அதை இயக்கும் வாய்ப்பும் பிரித்விராஜை தேடிவந்துள்ளது.. பிஸ்கட் கிங் ராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ்உருவாக இருக்கிறதாம். அதேசமயம் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதாலும் கதையின் முக்கிய கதாபாத்திரம் கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும் மலையாளத்திலும் இந்த வெப்சீரிஸ் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.