நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் 75 சதவிகிதம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அவரது மகனும் கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு இருந்தார் அவரது இளைய மகன். அதையடுத்து நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட் போன்றவர்கள் உடனடியாக மருத்துவ உதவி அளித்தனர். இந்த நிலையில் இந்த தகவலை அறிந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உதவி செய்திருக்கிறார். சிரஞ்சீவி நடித்த பல படங்களுக்கு சிவசங்கர் நடனம் அமைத்துள்ளார்.