'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால் அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல். இவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விஜய் சேதுபதி, சிம்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கான புரொமோவை வெளியிட்டுள்ளனர். அதில் மருத்துவமனையிலிருந்து கமல் பேசுகிறார். ‛‛தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டு கழிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்'' என கமல் கூறும்போது ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி ஆகிறார்.
பொதுவாக சனிக்கிழமைக்கான முதல் புரொமோ வீடியோவை மதியம் தான் வெளியிடுவர். ஆனால் இன்று 5 மணியளவில் தான் முதல் புரொமோ வெளியானது. கமல் இடத்தில் ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.