நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

உலக அளவில் உள்ள டிவி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. ஹிந்தியில் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமான நிகழ்ச்சி அதிகமாக டிவி பார்க்கும் தமிழ் நாட்டிற்கு நான்கு வருடங்களுக்கு முன்புதான் வந்தது. தமிழ்த் திரையுலகின் முக்கியத்துவம் வாய்ந்த நடிகரான கமல்ஹாசன் தமிழில் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
2017ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில் கமல்ஹாசன் ஒரு பக்கம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஆரம்பிக்க மறுபக்கம் நடிகை ஓவியா முதல் சீசனில் மிகவும் பிரபலமானார்.
கடந்த நான்கு சீசன்களாக ஒரு வாரம் கூட இடைவெளி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் வாராவாரம் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இப்போது ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் முதல் முறையாக கமல்ஹாசனுக்கு ஒரு பிரேக் விழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் குறைந்தது இன்னும் நான்கு வாரங்களுக்காவது அவர் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. கொரோனா தாக்கத்தில் இருந்து அவர் மீண்டு வந்த பின்பு, இரண்டு வாரங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும். அதன்பிறகே அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.
கடந்த சீசனில் கூட கமல்ஹாசன் இருக்கும் அரங்கில் பார்வையாளர்கள் இல்லாமல் தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சீசனில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். கமல்ஹாசன் மீண்டும் வந்தாலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான். அவரே பார்வையாளர்களை அனுமதிக்காதீர்கள் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிடுவார்.
5வது சீசன் ஆரம்பித்து 7 வாரங்கள் கடந்துவிட்டது. இன்னும் 7 வாரங்கள் வரை நிகழ்ச்சி நடக்க வேண்டும். கமல்ஹாசன் வர இன்னும் 4 வாரங்களாவது ஆகிவிடும். அதன்பின் கடைசி கட்டத்தில் வேண்டுமானால் அவர் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு.
இடையில் யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது சஸ்பென்சாக உள்ளது. இருந்தாலும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. யாராக இருந்தாலும் கமல்ஹாசன் இடத்தை நிரப்ப முடியாது என்பது உண்மை. அதனால், டிவி ரேட்டிங் மேலும் குறையும் சிக்கலும் இருக்கிறது.