பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. அதனால் தான் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த 'த கோஸ்ட்' படத்திலிருந்தும் விலகினார். இந்தியன் 2 படத்திலும் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும், காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்பம் பற்றிய தகவலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருந்திருந்தால் வயிறு மேடிட்டு அல்லவா இருக்கும். அவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல ரசிகர்களைக் குழப்புவதற்காகவே பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள்.
எதற்காக காஜல் இப்படி பழைய புகைப்படங்களை வெளியிட வேண்டும். ஒருவேளை நடிகை ஸ்ரேயா குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்தே அதை வெளியில் சொன்னதைப் போல காஜலும் குழந்தை பிறந்த பிறகு சொல்லலாம் என யோசிக்கிறாரோ என்றும் கிசுசுக்கிறார்கள்.




