''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழில் 'இந்தியன் 2' படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை மட்டும் சுமார் 350 கோடி கொடுத்து அந்நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். ரீமேக் உரிமைகள், இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மட்டும் தயாரிப்பாளர் அவரது வசம் வைத்துள்ளாராம்.
படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றால் கூட 350 கோடிக்கு விற்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இப்போதே 50 கோடி லாபம் கிடைத்துவிடும். மேலும் இன்னும் விற்கப்படாத உரிமைகளான வெளிநாட்டு, இசை, ரீமேக் உரிமை ஆகியவற்றை விற்றால் அதுவே 100 கோடி வரை போகும்.
பான்-இந்தியா படங்களை பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால், இந்த விலைக்குப் போகவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.