சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. 2022 பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள், முதல் பார்வை வீடியோ ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வலிமை' படத்தின் தமிழக வினியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து வாங்கியுள்ளன. தற்போது ஏரியா வாரியாக படத்தை விற்கும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில் இப்போதே வியாபாரப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'வலிமை' படத்துடன் பொங்கலுக்குப் போட்டியாக வேறு பெரிய படங்கள் வர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலைமை. எனவே, படத்தை வாங்க பலரும் போட்டி போடுவதாகத் தகவல்.
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் 'வலிமை' படத்தைப் பார்க்க அஜித் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள்.