'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகி உள்ளது மரைக்கார் - அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்த படத்தை மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ஒடிடி தளங்கள் போட்டி போட்டு கேட்டபோதும் கூட தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வேன் என உறுதியாக நின்றார் ஆண்டனி பெரும்பாவூர்.
ஆனால் இப்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட அதில் மரைக்கார் படத்தை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்பதால் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஒடிடியில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரானார்.
இவ்வளவு பெரிய படம் வெளியாகும்போது தியேட்டருக்கு பொதுமக்கள் திரண்டு வருவார்கள், ஓரளவு லாபமும் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் அவரது இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பிறகு கேரள மாநில அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விவகாரத்தில் தலையிட்டு சில உறுதிமொழிகளை கொடுத்தபிறகு இந்த படம் முதலில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அதன் பிறகு ஒடிடியில் வெளியாகும் என்றும் முடிவானது. ஆனால் மோகன்லாலும் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் மீண்டும் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முடிவெடுப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை ஒடிடியில்தான் வெளியிடுவது என தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதியாக முடிவு எடுத்த நிலையில் படத்தின் இயக்குனரான பிரியதர்ஷன், மோகன்லால், ஆண்டனி பெரும்பாவூர் இருவரையும் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டருக்கு வரவழைத்து தான் வேறு ஒரு படத்திற்காக கோல்கட்டா செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னதாக கடைசியாக ஒருமுறை மரைக்கார் படத்தை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று தயாரிப்பாளர், மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மூன்று பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் இந்த படத்தை பார்த்து இருந்தாலும் தற்போது விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில சிறப்பு அம்சங்கள் சேர்த்து மெருகூட்டப்பட்டு இந்த படத்தை பார்த்தபோது மூவருமே தங்களை மறந்தபடி படம் பார்க்க ஆரம்பித்தனராம். குறிப்பாக கிளைமாக்ஸ் சமயத்தில் மோகன்லாலின் மனைவி சுசித்ராவின் கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். படம் முடிந்து விளக்குகள் எரிந்த பின்னரும்கூட மூவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம். அதன்பின் வெளியே வந்ததும் தயாரிப்பாளரிடம் மோகன்லால் கேட்ட கேள்வி இப்போது என்ன பண்ணலாம் என்பதுதான்.
காரணம் இப்படி ஒரு அருமையான படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்தால்தான் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தம் என அவர் நினைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளரிடம் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டால் எவ்வளவு நஷ்டம் வரும் என்று கேட்டுள்ளார். மோகன்லாலே இப்படி கேட்டதும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை நாம் தியேட்டரில் இந்த படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளார். மோகன்லாலும், சரிதான் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அடுத்த படங்களில் அதை நாம் சரி செய்து கொள்வோம். அதனால் மரைக்கார் படத்தை தியேட்டரிலேயே வெளியிடலாம் என உறுதியான முடிவை எடுத்தாராம்..