டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சரவண சுப்பையா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி வெளியான படம் 'சிட்டிசன்'. இப்படம் வெளிவந்து 24 ஆண்டுகள் முடிந்து 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
படம் வெளிவந்த போது வசூல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனால், பிற்காலத்தில் டிவியில் இப்படம் ஒளிபரப்பாகும் போது படத்தைப் புதிதாகப் பார்க்கும் அடுத்த தலைமுறையினர் பாராட்டினார்கள்.
அத்திப்பட்டி என்ற பெயர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. இந்திய வரைபடத்தில் இருந்தே அத்திப்பட்டி என்ற கிராமத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மறைத்த வரலாறு தான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை.
பிளாஷ்பேக்கில் இடம் பெற்ற அஜித், மீனா ஆகியோரது நடிப்பும், மறைக்கப்பட்ட அத்திப்பட்டி கிராமத்தின் வழக்கை வேறொரு வழக்கு மூலமாக விசாரிக்கும் சிபிஐ அதிகாரி நக்மா நடிப்பும், மகன் அஜித்தின் விதவிதமான தோற்ற நடிப்பும் இந்தப் படம் டிவியில் ஒளிபரப்பாகும் போது அதிகம் பேசப்பட்ட, பகிரப்பட்ட கதாபாத்திரங்களாக அமைந்தது. நாயகி வசுந்தரா தாஸ், நிழல்கள் ரவி, தேவன், ஹனிபா, மோகன் நடராஜன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் படத்தில் முக்கியமானவை.
தேவா இசையில் சில பாடல்கள் அந்தக் காலத்தில் டிவிக்களில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட பாடல்களாக இருந்தன. படத்தின் உருவாக்கமும் டெக்னிக்கல் விஷயங்களும் மிரட்டலாகவே இருந்தன.
படம் வெளியான போது ஷங்கர் பாணியிலான ஒரு படம் என்று பேசப்பட்டது. மேக்கப் உள்ளிட்ட சில விஷங்களைச் சரியாகச் செய்திருந்தால் அப்போதே பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். ஏனோ கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறாமல் போனது.
சில படங்கள் காலம் கடந்த பின்பும், ரசிகர்களிடம் நிற்கும். அந்த விதத்தில் அஜித் நடித்து வெளிவந்த படங்களில் இந்தப் படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை அழுத்தமாகவே பதிவு செய்யலாம்.