Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய்பீம் விவகாரம் - நிபந்தனையற்ற மன்னிப்பு, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சூர்யாவுக்கு நோட்டீஸ்

15 நவ, 2021 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Vanniyar-sangam-send-notice-to-Suriya-over-Jai-bhim-row,-demands-apology-and-Rs.5-crore

சென்னை : ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யா, ஜோதி உள்ளிட்ட படக்குழுவிற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வன்னியர் சமூகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம். படத்திற்கு பரவலாக பாராட்டுகள் ஒருபுறம் கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தியதயாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக படத்தில் வரும் போலீஸ் கேரக்டரின் பெயர் மாற்றம், சில காட்சிகளில் இருந்த குறியீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தில் இருந்த அந்த குறியீடு மாற்றப்பட்டது.

‛‛ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்த சூர்யா ‛‛விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழி சார்பில் நடிகர் சூர்யா, ஜோதிகா(தயாரிப்பு), இயக்குனர் ஞானவேல், அமேசான்(ஓடிடி) உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‛‛வன்னியர்கள் சங்கத்தை தவறாக சித்தரித்ததற்காகவும், இழிவுப்படுத்தியதற்காகவும் பத்திரிக்கை, ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சட்டப்படி வழக்கு தொடரப்படும். அதோடு படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளையும் நீக்க வேண்டும். ஒருவார காலத்திற்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்களுக்கு வேண்டுகோள்
இந்நிலையில், ‛ரசிகர்கள் வரம்பு மீறாமல் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதிக் காக்க வேண்டும். பேச்சாகவோ அல்லது சமூகவலைதளம் வாயிலாகவோ எந்த ஒரு எதிர்வினையும் ஆற்ற வேண்டாம்' என சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
12 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மாளவிகா12 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ... நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

vbs manian - hyderabad,இந்தியா
16 நவ, 2021 - 10:48 Report Abuse
vbs manian வெளியில் இருந்த ஓணானை உடம்பின் மேல் ஏற்றிக்கொண்டு அவஸ்தை.
Rate this:
murali - hydrabad,இந்தியா
16 நவ, 2021 - 10:18 Report Abuse
murali நீங்க என்னவோ காந்திஜி மாதிரி சீன்போடுறீங்க
Rate this:
murali - hydrabad,இந்தியா
16 நவ, 2021 - 10:16 Report Abuse
murali தாளிதிகளை திட்டி எத்தனை படம் எடுத்தீங்கனா நாங்க ஏதாவது சொன்னோமா தாளிதிகளை கஞ்சா விதத்தை காட்டுனீங்க
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 நவ, 2021 - 09:58 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் படத்திலே மரம் வெட்டக்கூடாதுன்னு சொல்றாங்களா என்ன? மரவெட்டி கூட்டம் கொந்தளிச்சிருக்கா இல்லை வெறும் தைலாபுர கூவல் மட்டுமா ??
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 நவ, 2021 - 09:55 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எதிர்த்து வழக்காட செலவுக்கு பண உதவி செய்ய மக்கள் தயார். நீங்கள் வழக்கை எதிர்கொள்ளுங்கள்.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in