ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்த அட்லீ, கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, ஷாருக்கான் படத்தை இயக்குவதற்காக மும்பை, சென்னை என பறந்து கொண்டிருந்தார்.
ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக தனது மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார் ஷாருக்கான். அதற்குள் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும், நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், நயன்தாரா படத்திலிருந்து விலகவில்லை என்றம் அவர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தகவலையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அங்குள்ள ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். தற்போது வரை படத்திலிருந்து நயன்தாரா விலகல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதுவரையில் நயன்தாரா தான் படத்தின் கதாநாயகி.