ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபூர்வமாய் சமூக வலைத்தளங்கள் பக்கம் வருபவர் த்ரிஷா. தற்போது துபாயில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார் போலிருக்கிறது- துபாயில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, “என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. அது எப்போதுமே ஒரு அற்புதம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ அது ?.