'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி |

அஜய் பூபதி இயக்கத்தில், சைதன் பரத்வாஜ் இசையமைப்பில், ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைதிரி, அனு இம்மானுவேல் மற்றும் பலர் நடித்த படம் 'மகா சமுத்திரம்'. தமிழ், தெலுங்கில் தயாரானதாக சொல்லப்பட்ட இப்படத்தின் தெலுங்கு பதிப்பை கடந்த மாதம் அக்டோபர் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியிட்டனர். ஆனால், படம் எந்த ஒரு வரவேற்பையும் பெறாமல் படுதோல்வி அடைந்தது.
தெலுங்கில் அப்படிப்பட்ட ஒரு ரிசல்ட் வந்ததால் தமிழில் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டுள்ளனர். இது பற்றிய அறிவிப்பை படத்தை நெட்பிளிக்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்படி இரண்டு மொழிகளில் எடுத்து ஒரு மொழியை தியேட்டர்களிலும், மற்றொரு மொழியை ஓடிடி தளங்களிலும் வெளியிட்டுள்ளது திரையுலகத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு மொழியில் தோல்வியுற்றதால் மற்றொரு மொழியிலும் வெளியிட்டு மீண்டும் ஒரு தோல்வியைச் சந்திக்காமல் தயாரிப்பாளர் தன்னை காப்பாற்றிக் கொண்டார் என்பதே உண்மை என்கிறார்கள் கோலிவுட்டில்.