விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம்' மலையாளப் படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின் இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, சிங்களம், சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தோனேசியா மொழியில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் இந்த இரண்டாம் பாகத்தை தெலுங்கில் மார்ச் மாதமே ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். முதல் பாகத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க, முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் அப்படியே பங்கேற்றனர். இப்படம் நவம்பர் 25ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள். ஆனால், டீசருக்கு மிகச் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை மட்டுமே யு டியூபில் கிடைத்துள்ளது.
மலையாள ஒரிஜனல் த்ரிஷ்யம் 2 போல தெலுங்கு ரீமேக்கான த்ரிஷ்யம் 2 வரவேற்பைப் பெறுமா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.