பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைவரது மனதையும் வென்றது. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை கட்டுக்கோப்பாக காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.
பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ளவர் தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினியில் செம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.




