'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து நடிக்க வைத்திருந்தார் பிரித்விராஜ். விவேக் ஓபராய்க்கும் இந்தப் படம் பெரிய பெயர் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் வில்லனாகவே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் விவேக் ஓபராய். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தற்போது பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து வரும் கடுவா என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். இந்த படத்தில் காட்டு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க அவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்படும் காட்டிலாகா அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார் இதை குறிப்பிடும் விதமாக "வேட்டைக்காரன் வந்துவிட்டான்.. எச்சரிக்கையாக இரு கடுவா.. இன்று முதல் ஆக்சன் ஆரம்பம்" என்று குறிப்பிட்டு படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.