அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாவும், அவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்ததாகவும், அவரை விவாகரத்து செய்யாமலேயே பிரியாமணியை திருமணம் செய்துக் கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால் இதை மறுத்து வந்தார் பிரியாமணியின் கணவர் முஸ்தபா. இருந்தப்போதிலும் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கு கருத்து வேறுபாடு எழுந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்த பிரியாமணி, தற்போது கணவருடன் தீபாவளி கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.