ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காற்றின் மொழி. இந்த திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இது வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான தும்ஹரி சூலு என்ற படத்தின் ரீமேக் ஆகும். ஆச்சாரமான குடும்ப பெண், எப்.எம் வானொலியில் இரவு அடல்ட்ஸ் ஒன்லி நிகழ்ச்சி நடத்துவது மாதிரியான கதை. ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்பட பலர் நடித்திருந்தனர்.
தற்போது துபாயில் நடந்து வரும் எக்ஸ்போவின் ஒரு பகுதியாக அங்கு பெண்களை மையமாக கொண்ட திரைப்பட விழாவும் நடக்கிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த பல மொழி படங்கள் திரையிடப்படுகிறது. இதில் தமிழ் பட வரிசையில் காற்றின் மொழி திரையிட தேர்வாகி இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில் காற்றின் மொழி திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. என்று தெரிவித்துள்ளார்.