கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? |
சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி, மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சில்லாட்ட. கதாநாயகனாக விஜீத் அறிமுகமாகிறார். டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா .நேசி, ஸ்டெபி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தஷி இசை அமைக்கிறார். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சிவராகுல் கூறியதாவது: சில்லாட்ட என்ற வழக்குச் சொல் தென்தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதாகும். சில்லாட்ட என்பது பனைமரத்தை சார்ந்தது. பனைமரத்தில் உள்ள ஓலைகளையும் மட்டைகளையும் தாங்கி நிற்கும் வலைதான் சில்லாட்ட. அந்த காலத்தில் தண்ணீர் பதனீர் போன்ற திரவ பொருள்களை சல்லடை செய்வதற்கு இந்த சில்லாட்டயையே பயன் படுத்தினார்கள். காலபோக்கில் சில்லாட்டயையே மக்கள் மறந்து புதுவிதமான செயற்கை சில்லாட்டைகளை உருவாக்கி விட்டார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான பனைதொழிலை அழித்து சமூகத்திற்கு விரோதமான தொழிலுக்கு பயன்படுத்துகிறார். இதனால் பனை தொழிலை செய்துவரும் ஹீரோ மற்றும் பனை தொழிலையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. தனது பனைதொழிலை மீட்பதற்கு ஹீரோ களத்தில் குதிக்கிறான். இறுதியில் வெற்றிபெற்றது யார் என்பதை கிராமிய சூழலில் மண்வாசனை மாறாமல் படமாக்கி இருக்கிறேன். என்றார்.