ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

மாலை நேரத்து மயக்கம் என பழைய பாடல் ஒன்றும் இருக்கிறது.. அதே வரியில் ஒரு படமும் கூட வெளிவந்துள்ளது. ஆனால் நண்பகல் நேரத்து மயக்கம் என தற்போது ஒரு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் இங்கல்ல.. மலையாளத்தில்... ரொமாண்டிக்காக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் நடிகர் மம்முட்டி தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதுடன் அவரே இந்தப்படத்தை தயாரிக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். ஆனால் இந்தப்படம் முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக இருக்கிறதாம்.
இந்தப்படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கவுள்ளார். மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறத. மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும், மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பது குறிப்பிடத்தக்கது. .




