சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.. தியேட்டர்களில் தான் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது மலையாள தியேட்டர் உரிமையாளர்கள் இடத்தில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் வலது கரமாக இருப்பவர் என்பதால் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் அவரது இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது பற்றி இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளதாவது : இந்தப்படத்தை உருவாக்குவது என்பது நானும் மோகன்லாலும் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கண்டுவந்த கனவு.. மிகப்பெரிய செலவில் இந்த படம் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையில் சம்பாதித்த மொத்தத்தையும் இந்தப்படத்தில் எங்களை நம்பி போட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. அதனாலேயே நானும் மோகன்லாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளோம். மிக அதிக சம்பளம் வாங்கக்கூடிய கலை இயக்குனர் சாபு சிரில். கூட, இந்தப்படத்தில் தனது வேலை காலம்காலமாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, வெறும் 25 லட்சம் மட்டுமே பெற்றுக்கொண்டு வேலை பார்த்துள்ளார்.
தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்கும்போதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம்.. ஆனால் நாட்கள் நீண்டுகொண்டே போனதாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மிகப்பெரிய தொகையை வட்டியாகவே கட்டியதாலும், வேறு வழியின்றி தான் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. எங்கள் இருவரில் யாரோ ஒருவர் பிடிவாதம் காட்டியிருந்தாலும் ஆண்டனி இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட முடிவு செய்திருப்பார்.
ஆனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவரது நஷ்டத்தின் மீது எங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இருவருமே விரும்பவில்லை. மற்ற யாரையும் விட இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் எங்கள் மூவருக்கும் தான் வருத்தமும் வேதனையும் அதிகம்” என கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.