'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் மில்டன் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி நடிக்கும், ‛மழை பிடிக்காத மனிதன்' படம் சலீம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. விஜய் ஆண்டனி நடித்த சலீம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. டாமன் அண்ட் டையூ பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு மத்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட திரையுலகை சேர்ந்த தனஞ்ஜெயா மற்றும் ப்ருத்வி அம்பர் ஆகிய இருவரும் தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகின்றனர். சலீம் படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருகிறது.