ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? |
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து மாஸ்டர் படத்தில் நாயகி ஆனார். தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
மாளவிகா மோகனன் போட்டோஷூட் படங்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தற்போது ராஜா காலத்து பெண்ணைப் போல போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். "நான் வேறு சகாப்தத்தில் பிறந்திருந்தால், நிச்சயமாக ஒரு அழகான இளவரசியை விட போர் செய்யும் பெண்மணியாகவே இருப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார்.