ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் பலர் நடித்து சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இப்படம் 1995 கடலூர் மாவட்டத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவருக்கு போலீஸ் காவலில் நேர்ந்த கொடுமைகளைப் பற்றியும், தனது கணவரை மீட்க அவரது மனைவி பார்வதி நடத்திய சட்டப் பேராட்டத்தைப் பற்றியும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
அதே சமயம் படத்தில் கொடுமைக்கார போலீசாக நடித்த கதாபாத்திரத்தை வன்னியர் போன்று சித்தரித்ததற்கு அந்த சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். படத்தின் வசனங்களுக்காக உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவர் இந்த தவறான சித்தரிப்பிற்கு தனது கண்டனப் பதிவை முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
படத்தில் ஒரு காட்சியில் வீட்டில் அந்த கொடுமைக்கார போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் பேசிய போது பின்னணியில் இருந்த நாளிதழ் காலண்டரில் தீச்சட்டி படம் இடம் பெற்றது. அந்தக் குறியீடுதான் வன்னியர்களின் எதிர்ப்புகளுக்குக் காரணம்.
பின்னர் தன்னைத் தொடர்பு கொண்ட இயக்குனர் விரைவில் அந்த காலண்டரில் இடம் பெற்ற தீச்சட்டி படத்தை சாமி படமாக மாற்றுவதாகவும் உறுதியளித்தாக எழுத்தாளர் கண்மணி எழுதியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்தக் காட்சியில் இடம் பெற்ற காலண்டர் படம் சாமி படமாக மாற்றப்பட்டுள்ளது.