தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சமூக வலைத்தளங்கள் ரணகளமாக இருக்கும். தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசூலில் டாப் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த்.
'தர்பார்' படத்திற்குப் பிறகு 22 மாதங்கள் கழித்து அவர் நடித்து 'அண்ணாத்த' படம் வெளிவந்துள்ளது. இந்த வருடத்தில் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்துள்ள முதல் பெரிய படம். இந்த ஆண்டில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் வெளியான போது 50 சதவீத இருக்கைகள்தான். 'கர்ணன்' படத்திற்கு வெளியான முதல் நாளில் மட்டுமே 100 சதவீத இருக்கை அனுமதி இருந்தது. அதற்கு மறுநாளிலிருந்து கொரானோ தாக்கம் காரணமாக 50 சதவீத இருக்கைகளாகக் குறைக்கப்பட்டது.
அதனால், 'மாஸ்டர், கர்ணன்' படங்களை விடவும் 'அண்ணாத்த' படம் 2021ம் ஆண்டின் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். மேலும், ரஜினிகாந்த் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல்தான் அதிகம் என்றும் ஒரு தகவல்.
ஆனாலும், 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல் கடந்த சில வருடங்களில் வெளிவந்த விஜய் படங்களின் வசூலை விட அதிகம் என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை விஜய் ரசிகர்கள் ஏற்க மறுத்து 'சர்க்கார், மாஸ்டர், பிகில், மெர்சல்' படங்களுக்குப் பிறகுதான் 'அண்ணாத்த' வசூல் என மல்லு கட்டுகிறார்கள். அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, 2019ல் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்துடன் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் வசூல் அதிகம். ரஜினிகாந்த்துடன் போட்டி போட்டு அவரையே மிஞ்சியவர் அஜித் என ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார்கள்.
இன்னும் சில நாட்களுக்கு இந்த 'கலெக்ஷன்' சண்டை களை கட்டும்.