சிறிய படங்களுடனே முடிவுக்கு வரும் கோடை விடுமுறை | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் ஆசையை பூர்த்தி செய்த “தர்மம் எங்கே?” | எனது படத்திற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் : பவன் கல்யாண் | கமல், திரிஷாவை கதாபாத்திரங்களாகப் பார்க்க வேண்டும் : மணிரத்னம் | சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டிய நானி! | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா அளித்த இரண்டு பரிசு! | 'பராசக்தி' டைட்டிலை விட்டுக் கொடுத்தது ஏன்? -சொல்கிறார் விஜய் ஆண்டனி | ஓ மாறா - 'தக்லைப்' படத்தில் சிம்புவின் லிரிக் வீடியோ வெளியானது! | ஜூன் இரண்டாம் தேதி ஓடிடியில் வெளியாகும் 'டூரிஸ்ட் பேமிலி' | 'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? |
மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. இப்படம் 2022ஆம் ஆண்டு கோடையில் திரைக்கு வர உள்ளது.
மேலும். அனிருத் தான் இசையமைத்த படங்களில் எப்படியாவது இரண்டு மூன்று பாடல்களை ஹிட் பண்ணி விடுவதால் சமீபகாலமாக அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி இருப்பதால் அனிருத் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில் தற்போது சோனி மியூசிக் அதிக தொகை கொடுத்து விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.