பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கும், சில நடிகைகளுக்கும் பட்டப் பெயர்களை வழங்கி அதன்படியே ரசிகர்கள்அழைப்பது வழக்கம். முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாது புதிது புதிதாக நடிக்க வரும் சிலர் கூட வரும் போதே பட்டப் பெயர்களுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தும் வருகிறார்கள்.
தமிழ் நடிகர்களில் ஒரு காலத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என அழைக்கப்பட்டவர் அஜித்குமார். ஆனால், தன்னை அப்படி அழைக்க வேண்டாமென அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின் அவரை 'தல' என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். இதற்கு மட்டும் அஜித் எதுவும் சொல்லவில்லை. ரசிகர்களும் 'அல்டிமேட் ஸ்டார்' என்பதையே மறந்துவிட்டார்கள்.
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பவன் கல்யாணை அவரது ரசிகர்கள் 'பவர் ஸ்டார்' என்றே அழைப்பார்கள். ஆனால், கடந்த வருடத்திலிருந்தே தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். ஆனால், ரசிகர்கள் விடுவதாக இல்லை.
நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொண்ட போது ரசிகர்கள் 'பவர் ஸ்டார், பவர் ஸ்டார்' என கத்திக் கொண்டே இருந்தனர். அதனால், கோபமடைந்த பவன் கல்யாண், சத்தம் வந்த திசையை நோக்கி, “கத்தாதீங்க, என்னை பவர் ஸ்டார்னு சொல்லாதீங்க. கொஞ்சம் அறிவை வளர்த்துக்கோங்க,” என கோபமாகப் பேசினார். அதன்பின் சத்தம் போட்டவர்கள் அமைதியானவர்கள்.
அஜித் வழியில் பவன் கல்யாணும் தன்னை பட்டப் பெயரை வைத்து அழைப்பதை நிறுத்தச் சொல்வதை அவரது ரசிகர்கள் கேட்பார்களா ?.




