இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
2021ம் வருட தீபாவளி நவம்பர் 4ம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியன்று வெளிவரும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் கொரோனா தாக்கம் உள்ளது. இருந்தாலும் கடந்த வருட தீபாவளிக்கு தடுப்பூசிகள் வரவில்லை. இந்த வருட தீபாவளிக்குள் தமிழகத்தில் மட்டும் 70 சதவீத மக்கள் முதல் தடுப்பூசி போட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும், இன்று முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனால், தீபாவளி கொண்டாட்டம் தியேட்டர்களிலும் சிறப்பாகவே இருக்கும். அண்ணாத்த, எனிமி ஆகிய இரண்டு படங்கள் தியேட்டர்களிலும், ஜெய் பீம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களிலும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளன.
அண்ணாத்த
இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 4 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்
அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா, முதல் முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டீசர், டிரைலர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்ணன், தங்கை பாசத்துடன் பேமிலி சென்டிமென்ட் ஆக்ஷன் என ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்தா அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எனிமி
இயக்கம் - ஆனந்த் சங்கர்
இசை - தமன், சாம் சிஎஸ்
நடிப்பு - விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 4 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
விஷால், ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம். தமிழ் சினிமாவில் மல்டிஸ்டார் படங்கள் வருவது அரிதான விஷயம். நண்பர்கள் விஷால், ஆர்யா எந்த ஈகோவும் இல்லாமல் இந்தப் படத்தில் எனிமிகளாக நடித்துள்ளார்கள். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாகக் கொடுத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெய் பீம்
இயக்கம் - த.செ.ஞானவேல்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சூர்யா, லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 2 நவம்பர் 2021 (அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 44 நிமிடம்
சமூக அக்கறையுள்ள ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு டீசர், டிரைலரிலேயே தெரிந்துவிட்டது. நேற்றே இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியை நடத்தி முடித்துவிட்டார்கள். படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள், பல பிரபலங்கள் ஏற்கெனவே பாராட்டி வருகிறார்கள்.
மக்கள் பிரச்சினையைப் பேசும் இது மாதிரியான படங்கள் தமிழில் அடிக்க வந்தால் தமிழ் சினிமா மீதான கவனம் அதிகம் பெறும். இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படம் மூலம் நிச்சயம் பேசப்படுவார் என்று ஏற்கெனவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
எம்ஜிஆர் மகன்
இயக்கம் - பொன்ராம்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - சசிகுமார், மிர்ணாளினி ரவி, சத்யராஜ், சமுத்திரக்கனி, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 4 நவம்பர் 2021 (டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் பெற்ற பெயரை சீமராஜா படத்தில் இழந்தவர் இயக்குனர் பொன்ராம். இந்த எம்ஜிஆர் மகன் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், படம் ஓடிடியில் வெளியாகிறது.
அப்பா, மகன் இருவருக்குமிடையில் இருக்கும் பாசப் போராட்டத்தை சுவாரசியமாகக் கொடுத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கிராமத்துப் பின்னணிக் கதை பொன்ராமுக்கு மீண்டும் கைகொடுக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.