என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

'சிந்து சமவெளி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். அதன்பிறகு மைனா, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி - 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டது. 
கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர்.  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே  பாராட்டை பெற்றார். 
இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், குடி யெடமைதே என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.  இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
தற்போது சில படங்களை மட்டுமே அமலா பால் கைவசம் வைத்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் காடவர் பத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.  தற்போது அமல் பால் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
           
             
           
             
           
             
           
            