யமுனா சின்னத்துரையின் 'டிரெயின் சீரிஸ்' போட்டோஸ் | செஞ்சு வச்ச சிலை : லீசா எக்லேர்ஸ் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள் | 2022 அரையாண்டு கூகுள் தேடல் : 22வது இடத்தில் விஜய் | மீண்டும் ஒரு 'சூர்ய வம்சம்' : சரத்குமார் நம்பிக்கை | 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் |
நடிகர்கள் ஸ்ரீகாந்த், அசோக் ஆகியோர் புதியதோர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். ராம ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‛மாய புத்தகம்' என பெயரிட்டுள்ளனர். தேன் படத்தில் நடித்த அபர்ணதி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயில் படத்தில் நடித்துள்ளார்.
நாக ஜென்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் ராம ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ‛நாகப்பாம்புகளில் இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே திரும்பத் திரும்ப பிறக்கும், ஒரு ஆன்மாவையும், அது வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே கடந்து செல்லும் கதாபாத்திரங்களையும் சுற்றியே கதை நகர்கிறது.
எனக்கு கிளாசிக்கல் தோற்றம் உள்ள மற்றும் ஆக்ஷனும் செய்யக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். நாகப்பாம்பின் உடல்மொழியை அவர்களின் நடிப்பில் படம்பிடிக்கக்கூடிய நடிகையையும் தேடிக்கொண்டிருந்தேன். நாங்கள் பல நடிகைகளுடன் ஒரு டெஸ்ட் ஷூட் செய்தோம். அதில், அபர்ணதி சிறப்பாக நடித்ததால், அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தோம்,' என்றார்.