''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக குறைந்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகள் பழையபடி திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிலைகள் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை முன்பு போல உற்சாகமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கேரளாவிலும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு செய்தது. ஆனால் மலையாள படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு இன்னும் முழுமனதுடன் தயாராகவில்லை. இந்த நிலையில் கேரளாவிலும் டாக்டர் படம் திரையிடப்பட்டு அங்கேயும் ரசிகர்களை வழக்கம் போல தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. டீசன்டான வசூலையும் பெற்று வருவதாக தியேட்டர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி மலையாள திரைப்படங்களும் தியேட்டர்களில் வெளியாவதற்கு இது தான் சரியான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.