'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்தியன்-2வை கிடப்பில் போட்டு விட்டு, ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
ஆனால் அதை எதிர்த்து லைகா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரண்டு தரப்பிலும் சமாதானம் ஏற்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியை இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காணும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து, நடந்த விசாரணைக்குபிறகு தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்க தடையில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனபோதிலும் லைகா நிறுவனம் தொடர்ந்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஷங்கர்-லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என்று அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர். அதனால் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.