ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் தீபாவளி ரிலீசாக வெளியானது கைதி திரைப்படம். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடித்த பலருக்கும் பாராட்டுக்களையும் கவனத்தையும் பெற்றுத்தந்தது. அதில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து, தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
தற்போது கைதி படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தப்படத்தில் டப்பிங் பேசியபோது நடைபெற்ற முக்கியமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார் அர்ஜுன் தாஸ். இந்தப்படத்தில் பயங்கரமாக சிரித்தபடி வசனம் பேசிய காட்சி ஒன்றுக்கு டப்பிங் பேசும்போது பலமுறை டேக் வாங்கியது. அதனால் இயக்குனரின் புதிய யோசனையின்படி, படத்தில் நடித்தபோது எப்படி நடித்தாரோ, அதேபோல டப்பிங் அறையிலும் கைகளை பின்னால் கட்டியவாறு மண்டியிட்து சிரித்தபடி அந்த காட்சியை நடித்தபடியே டப்பிங் பேச அது சரியாக ஒர்க் அவுட் ஆகியதாம். அந்த வீடியோவையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அர்ஜுன் தாஸ்..